பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இண்டூர் சக்தி விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா மே, 1ம் தேதி நடக்கிறது.இன்று (ஏப்.29) காலை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், மாலை 3 மணிக்கு தீர்த்த குடம் எடுத்தலும், 6 மணிக்கு முதல் கால யாகபூஜை, மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. 30ம் தேதி காலை, 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, கோபுர கலசம் வைத்தல், மாலை, 4 மணிக்கு அஷ்டபந்த மருந்து சாத்துதல், 5.30 மணிக்கு, மூன்றாம் காலயாகபூஜை, தீபாராதனை நடக்கிறது. மே 1ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, காலை, 7 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் விநாயகர் கோவில் விமானம், மூலவருக்கும் கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு மேல், 9.30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஸ்வாமி கும்பாபிஷேகம் நடக்கிறது. வேலூர் நீலக்கண்ட தீட்சிதர், அருணாச்சல சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். 10 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நடக்கிறது.