பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
நாமக்கல்: புதன்சந்தை மாரியம்மன் கோவில் திருவிழாவில், மழை வேண்டி, வரும், மே,1ம் தேதி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.நாமக்கல் அடுத்த, புதன்சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று காலை, 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மாலை, 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடந்தது.இன்று (ஏப்., 29) காலை, 9 மணிக்கு அம்மனுக்கு தேன், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சனம், சந்தனம், குங்குமம், திருநீரு ஆகியவற்றால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், காலை, 11 மணிக்கு சகஸரநாம பூஜையும், மாலை, 4 மணிக்கு, குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.நாளை (ஏப்., 30) மாலை, 4 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, அலகு குத்துதல், அக்னி சட்டி மற்றும் பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், மே, 1ம் தேதி காலை, 9 மணிக்கு மழை வேண்டியும், மக்கள் சுபிட்சமாக வாழவும் அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம், மாலை, 5 மணிக்கு வண்டி வேஷமும் நடக்கிறது.தொடர்ந்து, 2ம் தேதி இரவு, 7 மணிக்கு, புஷ்ப வாகனத்தில் அம்மன் ஊர்வலம், சத்தாபரணம், மே, 3ம் தேதி மாலை, 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.