கொடைக்கானல் : கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் ஏப். 21ம்தேதி கொடியேற்று விழா மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் முதல் நாளான மண்டகப்படியில் காவல்துறை உட்பட பல்வேறு மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தன. பெரிய மாரியம்மன் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காவல் துறை மண்டகப்படியில் டி.எஸ்.பி. சந்திரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், எஸ்.ஐ., காமாட்சி நாதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். டாக்ஸி டிரைவர்கள் மண்டகப்படியை தலைவர் மணி, செயலாளர் சிற்பி அமல்ராஜ், மற்றும் ஓட்டுனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கொடைக்கானல் வட்டார இந்துமகாஜன சங்கம், இந்து முன்னனி, விவேகானந்தா இந்து இயக்கம், ஆனந்தகிரி இளைஞரணியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.