அய்யனார் கோயிலில் 12 ஆண்டுக்கு பின் புரவி எடுப்பு விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2015 12:04
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரத்தில் 13 ஆண்டுக்கு பின் கிருஷ்ணப்ப அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா துவங்கியது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனியில் விழா நடக்கும். கடந்த 12 ஆண்டாக நடக்கவில்லை. தற்போது நடப்பதால் கிராமத்தினர் கிராமத்தில் ஒன்று கூடி சிறப்புடன் கொண்டாட முடிவு செய்தனர். கோயில் அருகே உள்ள சேங்கையில் ஏப்.17ல் பிடி மண் எடுத்து விழா துவக்கப்பட்டது. ஏப்.24ல் ரணசிங்கபுரம் புரவி பொட்டலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே1 அன்று காலை சேங்கை வெட்டு நிகழ்வும், மாலை தி.புதுப்பட்டியில் இருந்து புரவி எடுத்து திருப்புத்தூர் வீதி வழியே ரணசிங்கபுரம் பொட்டலுக்கு கொண்டு வந்து வைப்பர். மே 2 அன்று மாலை புரவி பொட்டலில் இருந்து புரவியை கோயிலுக்கு எடுத்து செல்வர். அங்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.