மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் உள்ள ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயில் வளாகத்தில், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ. 5 லட்சம் செலவில், ஓடை மற்றும் தீர்த்த தொட்டி கட்டப்பட்டன. இந்த கோயிலில் திருவிழா வரும் மே 2ம் தேதி நடக்கிறது. நேற்று கோயிலில் கொடி ஏற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கருப்பசாமி கொடி ஏற்றி வைத்தார். மூணாறு ஊராட்சி உறுப்பினர் வள்ளிதேவி மற்றும் கோயில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.