சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2015 01:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ திருநிலைநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மலைக் கோயிலில் ஸ்ரீ சட்டை நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள குளக்கரையில் நின்று அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கினார். அதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் தனது 3வது வயதில் தோடுடைய செவியென் என்ற முதல் தேவாரபதிகத்தை பாடினார். இதனால் இத்தலம் ஞான பூமியாக போற்றப்படுகிறது. இதனை போற்றும் வகையில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் சித்திரை மாதம் 10நாட் கள் நடைபெரும் திருமுலைப்பால் திருவிழாவை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின் றனர். விழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சி றப்பு யாகம் நடத்தப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை விஸ்வபிரம்மா சங்க தலைவர் கணேசன் தலைமையில் ராமு குருக்கள் நடத்திவைத்தனர். முன்னதாக விஸ்வபிரமா சங்க கட் டடத்தில் இருந்து திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வர ப்பட்டது. திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.