பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
உடுமலை : உடுமலை, பள்ளபாளையம் சுடலை ஈஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. உடுமலை, தளி ரோடு, பள்ளபாளையத்தில் அமைந்துள்ளது சுடலை ஈஸ்வரர் கோவில். கோவில் 25ம் ஆண்டு உற்சவத் திருவிழா, ஏப்., 21ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது; இன்று நிறைவடைகிறது. காப்பு கட்டுதலை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபி ேஷக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் சுவாமி குடியழைப்பு பூஜையும், மகா கணபதி, ேஹாம குண்ட பூஜைகளும் நடந்தன. நேற்று காலை, திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, மகா கணபதி யாக பூஜை, சிவணைந்த பெருமாள் மதிய கொடை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இன்று அதிகாலை, 3:30 மணிக்கு, குண்டம் இறங்குதலும், 4:00 மணிக்கு, அருள்வாக்கு வழங்குதலும், காலை, 7:00 மணிக்கு, விழா காப்பு கழற்றுதலும் நடக்கின்றன.