மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, 100 ஆண்டு பழமையான கழுகரை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. மடத்துக்குளம் அருகே கழுகரையில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது; ஆண்டுதோறும் கோடை திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, கடந்த 1ல் விழா துவங்கியது. இன்று அதிகாலை, 4:00 முதல் 7:00 மணி வரை பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை காலை, 7:00 மணி முதல் மாரியம்மன் வீதி உலாவும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்துள்ளனர்.