Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கம்பம் கவுமாரியம்மன்  திருவிழா: அலை அலையாய் வந்த அக்னி சட்டிகள்! கம்பம் கவுமாரியம்மன் திருவிழா: அலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகிய பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமி விழா!
எழுத்தின் அளவு:
கூடலழகிய பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமி விழா!

பதிவு செய்த நாள்

06 மே
2015
02:05

கூடலூர்: கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமி விழாவில் இரவு முழுவதும் உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.  கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இக்கோயிலில் சித்ராபவுர்ணமி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து விழாவை துவக்கினர்.  உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம், விதைப்பு எடுத்து வந்து சுவாமிக்கு திருமஞ்சனம், தீப ஆராதனை செய்தனர். கொசவபட்டியார் பங்காளிகள் கும்புகோயில் மாடு பிடித்து வந்து சுவாமிக்கு மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நடந்தது. ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார். பல்வேறு சமுதாயத்தினரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் ஊர்வலமாக வந்து சுவாமி திருக்கோயில் அர்த்த மண்டபத்தில் வந்து சேர்ந்தது. பேயத்தேவர் பெண்வாரிசுகள் சார்பில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணல் பேயத்தேவர் ஆண் வாரிசுகள் சித்ராபவுர்ணமி திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar