Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குவியும் கேரள பக்தர்கள்: ... அங்காள பரமேஸ்வரி கோவிலில் நித்திய ஆராதனை திட்டம் துவக்கம்! அங்காள பரமேஸ்வரி கோவிலில் நித்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலுார் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா!
எழுத்தின் அளவு:
சூலுார் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

பதிவு செய்த நாள்

07 மே
2015
12:05

சூலுார் : காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பால் குட ஊர்வலம் நடந்தது. சூலுார் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை திருவிழா கடந்த, 21ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது. 28ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். 1ம்தேதி மாலை 108 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் சப்பரத்தில் பவனி வந்தது அருள்பாலித்தார். 400க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம், பால் குடம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பட்டிமன்றம், பக்தி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. அதேபோல் நேற்று சூலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நொய்யல் ஆற்றில் மேளதாளத்துடன், சூலுாரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar