காரைக்குடிக்கு மேற்கே 10 கி.மீ. தூரத்தில் திருப்பத்தூர் சாலையில் இருக்கிறது. குன்றக்குடி முருகன் கோயில். இங்கு சண்முகநாதர் எனும் பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார். முருகனின் வாகனமான மயில் சாப விமோசனம் பெற்ற தலம் இது. இங்கு தமிழ்ப்புத்தாண்டு அன்று சண்முகநாதருக்கு பாலபிஷேகம் நடத்தப்படுகிறது. இதை பால் பெருக்கு விழா என்கின்றனர்.