உசிலம்பட்டி : உசிலம்பட்டி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலின் 3 நாட்கள் திருவிழா துவங்கியது. நேற்று காலை மாதரை கிராமத்தில் இருந்து அம்மன் கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் உடலில் கத்தி போட்டு, அம்மனை அழைத்து வந்தனர். பின், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று சக்தி இருத்துதல், மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. நாளை பொங்கல் வழிபாடு முடிந்தபின் கரகம், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சிகளும் நடக்கும்.