நகரி : திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பர்ட் மருத்துவமனைக்கு, கோல்கட்டாவைச் சேர்ந்த மணீஷ் என்பவர், 11 லட்சம் ரூபாய்க்கான நன்கொடையை வரைவோலையாக, தேவஸ்தான அதிகாரிகளிடம் திருமலையில் வழங்கினார். அதேபோல், சென்னை அடையாறை சேர்ந்த சந்தானவள்ளி என்ற பக்தர், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலின் மேம்பாட்டு திட்டங்களுக்காக, ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக, கோவில் நிர்வாக அதிகாரி விஜயகுமாரிடம் வழங்கினார்.