மாணவர்கள் புதிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முயற்சி எடுக்கும் நேரம் இது. இந்த சமயத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதேஸ்வரர், கோல்வளை அம்மையை மனதில் நினைத்து, ஞானசம்பந்தரின் இந்த தேவாரத்தைப் பாடினால் நினைத்தது நடக்கும்.
சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக் குற்றம்இல் குணங்களோடு கூடும் அடியார்கள் மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறிய லுõரே.
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும் விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால் கண்டவன் இருப்பது கருப்பறிய லுõரே.
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப் போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும் காதவன் இருப்பது கருப்பறிய லுõரே.
மடம்படு மலைக்குஇறைவன் மங்கைஒரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத் தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால் கடந்தவன் இருப்பது கருப்பறிய லுõரே.
ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறிஆய விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதும் கருத்தவன் இருப்பது கருப்பறிய லுõரே.
விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும் கண்ணன் இருப்பது கருப்பறிய லுõரே.
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லுõரே.
பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறிய லுõரே.
அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர் சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்று என இருப்பது கருப்பறிய லுõரே.