ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் கையில் குழந்தை வடிவில் கிடைத்தாள் அல்லவா? தன் மகள் ஆண்டாளுடன் பெரியாழ்வார் வாழ்ந்த திரு இல்லம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வென்று கிழியறுத்தான் வீதியில் இன்றும் உள்ளது. மாவிலி பாணாதிராயர் என்ற மன்னர் கி.பி. 14 ம் நூற்றாண்டில் இந்த வீட்டைக் கோயிலாக மாற்றி அமைத்தார்.