காரைக்கால் கந்தூரி விழா: இரதம், பல்லக்கு பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2015 12:05
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாயொட்டி இரதம்,பல்லக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்காலில் பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 192ம் ஆண்டு கந்துõரி விழா வரும், 28ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும், இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஜூன் 6ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா, இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல் அதிகாலை 3 மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் ஜூன் 9 ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் பல்லக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் புதிதாக செய்யப்பட்டது.ஆண்டுதோறும் கந்தூரி விழாயொட்டி இரதம்,பல்லக்கு பணிகள் நடைபெறும்,பெரிய இரதம் சுமார் 34 அடி உயரம், சின்ன இரதம் 28 அடி உயரம், பூ பல்லாக்கு கடந்த ஆண்டு 21 அடியாக உள்ளது. ஆனால் இந்தாண்டு கூடுதலாக சுமார் 26 அடியாக செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த மாவட்டத்தில் இல்லாத சிரப்பு மிகுந்த அம்சங்களுடன் இரதம்,பல்லக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இரதம்,பல்லக்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.