திருப்பரங்குன்றம் சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2025 11:10
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. அக். 7ல் செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழாவில் விளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு வைல்தல், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் கரகம் ஊரணியில் கரைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.