Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ... கடத்தல் கும்பலால் ஆண்டவன் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொத்தனூர் மாரியம்மன் கோவில் நாளை குண்டம் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2015
12:05

ப.வேலூர் : பொத்தனூர் மாரியம்மன் கோவிலில், நாளை (மே,19) தேதி, குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம் தேதி கிராம சாந்தி, கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பூச்சோரிதல், மறுகாப்பு கட்டுதலும் நடந்தது. தினமும், ஸ்வாமி, சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, பூதகி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. இன்று, (மே, 18) அதிகாலை, 4.30 மணி முதல், 6 மணிக்குள், ஸ்வாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சியும், மாலை, 4 மணிக்கு திருத்தேரில் ஸ்வாமி புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (மே, 19) காலை, 6 மணிக்கு பூக்குழி பூஜை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோல், பெண்கள் தலையில் பூவாரி போட்டு, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 20ம் தேதி காலை, 7 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தியும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 21ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடுங்குதல், கிடாவெட்டு நிகழ்ச்சியும், மே, 22ம் தேதி காலை, 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை ஆடும் பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar