திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா மே 24ல் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2015 10:05
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா மே 24ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்ட பத்தை மூன்றுமுறை வலம் வந்து தீபாராதனை முடிந்து சேர்த்தி செல்வர். விசாகத்தை முன்னிட்டு ஜூன் 1 அதிகாலை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்ட பத்தில் எழுந்தருளுவர். பகல் 2 மணி வரை பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்துவரும் பால்குடங்களில் உள்ள பால், சுவாமிக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். பின்பு, கட்டளை அபிஷேகம் முடிந்து சுவாமிகள் சன்னதி சென்றடைவர். சண்முகர், வள்ளி, தெய்வானை சன்னதியைவிட்டு புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை விசாகத்தன்று மட்டுமே. ஜூன் 2 காலை 7 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சட்டத்தேரில் புறப்பாடாகி மொட்டையரசு திருவிழா நடக்கும். இரவு சுவாமி பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர்.