பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கொடியேற்றம், இன்று மாலை நடக்கிறது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கிராம சாந்தி நிகழ்ச்சியுடன், நேற்று துவங்கியது. நேற்று மாலை, செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அம்மன் தேரோடும் வீதிகளில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தன.இன்று, மாலை, 6:30 மணிக்கு, விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடக்கிறது. நாளை சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும், 28, 29ல் நந்தி, சேஷ, கற்பக விருட்ஷம் ஆகியவற்றில் வீதி உலா நடக்கிறது. 30ல், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 31ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 1ம் தேதி பகல், 2:30 மணிக்கு, விஸ்வேஸ்வரர் கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் தேதி மதியம், 2:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல், நடக்கிறது. இதையொட்டி, தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.