பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
பெ.நா.பாளையம் : காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்தனுார் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்தனுார் அம்மன் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. பழமையான இக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த, 20ம் தேதி துவங்கின. திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு, தீர்த்தக் குடங்கள் ஊர்வலம் ஆகியன நடந்தன. தொடர்ந்து, ஐம்பூதம், எண்திசை காவல் வழிபாடு, துணை கோவில்களில் சிறப்பு வழிபாடு, மூலமூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி காலை, 6:00 மணிக்கு திருக்குடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்தது. பின், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், முத்துசிவராமசாமி அடிகளார், பொன்மாணிக்கவாசக அடிகளார் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, அன்னதானம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அத்தனுார் அம்மன் சிம்மவானகத்தில் திருவீதியுலா, வாணவேடிக்கை, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.