காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்கா ஷெரிப் கந்துாரி விழாவில் பல்லக்கு வீதியுலா நேற்று நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) கந்துாரி விழா நேற்று துவங்கியது. பகல் 3.30 மணிக்கு ரதம், பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. பெரிய பள்ளி வாசலில் இருந்து அலங்கரித்த ரதம், பள்ளி வாசல் வழியாக லெமர் வீதி, பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை வழியாக சென்றது. இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் ஜூன் 6ம் தேதி போர்வை வீதி ஊர்வலமும், இரவு மின்சார சந்தனக்கூடு புறப்பாடு, சந்தனம் பூசுதல் நடக்கிறது. ஜுன் 9ம் தேதி கொடி இறக்குதல் நடக்கிறது.