புதுச்சேரி; பாக்கமுடையான்பட்டு முத்துவாழி மாரியம்மன் கோவில் ஆண்டு உற்வசத்தையொட்டி 108 சங்கு ஸ்தாபனம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று மாலை 108 சங்கு ஸ்தாபனம், சங்கு பூஜை, கலச பூஜை, பூர்ணாகுதி, மகா அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இன்று 29ம் காலை சக்தி கரகம், 1 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழு தலைவர் கணேசன், செயலாளர் ராஜா, கோவில் தனி அதிகாரி செல்வராஜன் செய்து வரு கின்றனர்.