குடந்தை பகுதி கோவில்களில் ரூ.2.05 லட்சத்தில் இடிதாங்கி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2011 11:07
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில், சோமேஸ்வரர் கோவில், கஞ்சனூர் அக்னீஸ்வரசுவாமி கோவில் கோபுரங்களின் பாதுகாப்புக்காக தலா 2 லட்சத்து 5,500 ரூபாய் மதிப்பில் இடி தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன என கோவில்களின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இதுகுறித்து இக்கோவில்களின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டாயிம் ஆண்டுக்கு மேலான தொன்மையும் பழமையும் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலும், மகாமக முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவில்களில் கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோவிலும், நவக்கிரக தலங்களில் சுக்கிரன் பரிவார தலமாக விளங்கிவரும் கஞ்சனூர் அக்னீஸ்வரசுவாமி திருக்கோவிலும் ஆகும். புகழ்பெற்ற இக்கோவில்களின் ராஜகோபுரத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பொது நல நிதி மூலம் தலா 2 லட்சத்து 5,500 ரூபாய் மதிப்பில் சென்னை ட்ரூ வேல்யூ இன்ஜினியர்ஸ் நிறுவனத்தினரால் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.