பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
11:06
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீலோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவிலில், தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீலோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் பழமையடைந்ததால் 60 ஆண்டுகளாக தேரோட்டம், பிரம் மோற்சவம் நடக்கவில்லை. இந்து அறநிலையத்துறை மூலம் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பொது மக்களின் நன்கொடை உள்ளிட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 17 அடி உயர தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த, 23ம் தேதி துவ ங்கியது. 24ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு மகாபிஷேகம், தீபாராதனை, இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 25ம் தேதி இரவு பூத வாகனம் உட்பட பல் வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 9:15 மணிக்கு, நடந்த தேரோட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ.,வடம் பிடித்து துவக்கி வைத்தார். இன்று காலை 10:00 மணிக்கு ஞானதீர்த்த குளக்கரையில், சுவாமி தீர்த்தவாரி, இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. தினசரி மாலை நேரத்தில் வேத பாராயணமும், பன்னிரு திருமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது.