திருவெண்ணெய்நல்லூர்: சி.மெய்யூர் அங்களாம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சி.மெய்யூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29ம் தேதி காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 30ம் தேதி காலை 8:00 மணிக்கு, இரண்டாம்கால யாகசாலை பூஜை, இரவு 10:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும் நடந்தது. காலை 9:30 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி அங்காளம்மன், கொடிமரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் கள் புனித நீர் ஊற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வசாதகத்தை ஞானசம்மந்த சிவாச்சாரியார் செய்திருந்தார்.