பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
நகரி: கல்யாண வெங்கடேசபெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா, இம்மாதம், 7ம் தேதி வரை நடக்கிறது. புத்துார் அடுத்த நாராயணவனம் பகுதியில், பத்மாவதி உடனுறை கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தாண்டின், பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சின்ன சேஷ வாகனத்திலும்; இரவு, 8:00 மணிக்கு, அம்ச வாகனத்திலும் உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேதி நேரம் வாகனம்
ஜூன் 1 காலை 8:00 மணி சிம்ம வாகனம்
ஜூன் 2 காலை 7:30 மணி கல்பவிருட்ச வாகனம் இரவு 8:30 மணி சர்வபூபால வாகனம்
ஜூன் 3 காலை 8:00 மணி மோகினி அவதாரம் இரவு 8:00 மணி கருட வாகனம்
ஜூன் 4 காலை 7:30 மணி அனுமந்த வாகனம் இரவு 8:00 மணி கஜ வாகனம்
ஜூன் 5 காலை 8:00 மணி சூர்யபிரபை வாகனம் இரவு 8:00 மணி சந்திரபிரபை வாகனம்
ஜூன் 6 காலை 9:00 மணி ரத உற்சவம் இரவு 7:30 மணி திருக்கல்யாணம் இரவு 9:00 மணி அஸ்வ வாகனம்
ஜூன் 7 காலை 8:30 மணி பல்லக்கு உற்சவம் இரவு 8:00 மணி சக்கரஸ்தானம்