Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகோபால சுவாமி அம்ச வாகனத்தில் உலா! அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ஆடியில் தேரோட்டம்! அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழா!
எழுத்தின் அளவு:
ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழா!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
11:06

குன்னுார்: குன்னுாரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும், சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில், நேற்று திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்பட்டன. நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, முடியக்கி என அழைக்கப்படும் ஆழ்வார்பேட்டையில், படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான, மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுவாமி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதம், முதல் திங்களன்று மட்டும் நடை திறந்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பகல் 1:30 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்; பின், நடை அடைக்கப்பட்டது. இனி, அடுத்த ஆண்டு தான் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்படும். கோடமலை கிராம முக்கியஸ்தர்கள் கூறியதாவது: முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை, பச்சை மூங்கிலில் சேகரித்து, அதைக்கொண்டு, மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வர். இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும், கோவிலில் விளக்கெரிய பயன்படுத்தப்படும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே, கோவில் நடை திறந்திருக்கும் என்பது, கோவிலின் சிறப்பு. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதன்படி, ஏற்றப்பட்ட நெய் விளக்கு, ஆறு மணி நேரம் மட்டும் எரிந்ததால், அதுவரை, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar