நீலாங்கரை: திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ஐந்து வகை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று, வைகாசி விசாகம் பவுர்ணமி சொர்ணாம்பிகை பூஜை நடைபெற்றது. காலை 9:00 மணி முதல், 10:30 மணி வரை நடைபெற்ற பூஜையில், பாலாபிஷேகம், இளநீர், பன்னீர், சந்தனம், மற்றும் விபூதி அபிஷேகம் நடந்தன. சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.