பண்ருட்டி: திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று விசாகம் நட்சத்திரத்தையொட்டி உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:00 நித்தியபடி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு உற்சவர் ரங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.