பதிவு செய்த நாள்
05
ஜூன்
2015
11:06
பெங்களூரு: திரவுபதி அம்மன் தீமிதி விழாவை முன்னிட்டு, இன்று சக்தி கரகம் எடுக்கப்படுகிறது. சிவாஜி நகர் பழைய மார்க்கெட் வீதி, திரவுபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு சார்பில், 44ம் ஆண்டு தீமிதி பெருவிழா நடந்து வருகிறது. இன்று மாலை 5:00 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவிலிலிருந்து கிருஷ்ணர், திரவுபதி அம்மன், பஞ்சபாண்டவர்கள் தேர் புறப்பட்டு, ஹலசூரு திருவள்ளுவர் சிலை அருகிலுள்ள மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், சுப்ரமணியர் கோவிலை சென்றடைகிறது.அங்கிருந்து, இரவு 7:30 மணிக்கு, சக்தி கரகம் புறப்பட்டு, திரவுபதி அம்மன் கோவிலை அடைந்து, அங்கு அலகு (சக்தி) நிறுத்தப்படுகிறது. இந்தாண்டு அலகு கரகத்தை, கிருஷ்ணா எடுக்கிறார்.