பதிவு செய்த நாள்
08
ஜூன்
2015
12:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் தெருவில் அமைந்துள்ள பழமையான கருணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசியாக நடைபெற்றது.காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகில், பச்சை யப்பன் தெருவில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கருணை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, ஐந்து மாதத்திற்கு முன், கோவில் திருப்பணிகள் துவங்கி அனைத்து பணிகளும் முடிந்தன.
நேற்று முன்தினம் காலை,6:30 மணியளவில் கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, மற்றும் லட்சுமி பூஜை, கோபூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், மாலை,6:00 மணியளவில், மூலவர் புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்பட்டது. நேற்று காலை, 8:45 மணியளவில், விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை, 10:30 மணியளவில், மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.