பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
விழுப்புரம்: வைலாமூர் கிராமத்தில் உள்ள ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த காணை வைலாமூர் கிராமத்தில் உள்ள ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி பூஜை, அனுக்ஞை, நவக்கிரக பூஜை, லஷ்மி பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜையும் நடந்தது.அன்று இரவு 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, புண்யாகவாசனம், நாடி சந்தனம், கடம் புறப்பாடு, காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் விநாயகர், முருகன், ஏழைமுத்துமாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர், இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.