பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
11:06
கும்பகோணம் : கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தங்கவேல், பழனிவேல், பாஸ்கரன், ராஜேந்திரன், சீனி, இளங்கோவன் மற்றும் திருப்பணிக்குழுவினர், கிராம மக்கள் இணைந்து திருப்பணிகள் துவங்கினர்.மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டது.கடந்த, 5ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. காலை, 10 மணிக்கு, விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் அபிஷேகம் நடைபெற்றது.பக்தர்கள் அனைவருக்கும், சென்னை மதர் இன்ஸ்டிடியூட் ஜெயராஜ் சார்பில், அன்னதானம் பல வகையான சித்ரான்னம் வழங்கப்பட்டது.இரவு, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.