பதிவு செய்த நாள்
10
ஜூன்
2015
11:06
ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தில், பகுதிவாசிகள் பங்களிப்புடன் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, இரு தினங்களாக யாகபூஜைகள், யாத்ரா தானம், அங்குரார்ப்பணம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து, கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.