Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்டதிக்குப் பாலகர்கள் புராணமும் - ... அக்னி-புராணம் அக்னி-புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
இந்திர புராணம்!
எழுத்தின் அளவு:
இந்திர புராணம்!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
05:06

அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ பலத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு; நெசவாளர்கள்- பொற்கொல்லர்கள் கிடையாது. அங்கு, கற்பகத் தருவே ஆடைகளையும்-நகைகளையும் கொடுக்கிறது. இங்கு சமையல் செய்வதும் கிடையாது. காமதேனு என்ற தெய்வீகப் பசுவே அனைவருக்கும் உணவளிக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வசிக்கின்றனர். இந்திரனை தேவேந்திரன் என்றும் அழைப்பதுண்டு. இவன் தேவர்களுக்கு அரசன். காசிப முனிவருக்கும் - அதிதி தேவிக்கும் புத்திரனாகத் தோன்றியவன். இவன், பொன் நிற மேனியுடையவன். இவனது ஆயுதம் வஜ்ரம், வஜ்ரம் என்ற வட சொல்லுக்கு வயிரம் என்பது பொருள். வயிரத்தைப் போன்ற உறுதியும். பளபளப்பும். விலை மதிப்பினும் உயர்ந்தது என்பது உட்பொருள்.

இவனது தேவி இந்திராணி. இந்திரலோகத்துக்கு அரசி. இந்திரம் என்பது ஒரு பதவி. ஆயிரம் அசுவமேத யாகத்தை எவன் பூர்த்தி செய்கிறானோ, அவன் இந்திரன் ஆவான். அவனது மனைவியாக இவள் இருப்பாள். இந்திரனது வாகனம் ஜராவதம் என்ற வெள்ளை யானை, உச்சைச் சிரவம் எனும் வெள்ளைக் குதிரை, இவனது மாளிகையின் பெயர்-வைசயந்தம். இவனது தேரின் பெயர்-வியோமயானம். அதை இயக்கும் சாரதியின் பெயர் மாதலி. குமாரன்-சயந்தன் என்பவன். இவனது சபை நடன நங்கையர்-ஊர்வசி, மேனகா, ரம்பை, திலோத்தமை முதலிய அரம்பையர். அருந்துவதோ அமிர்த பானம். கௌதமர் பாரியாகிய அகலிகை இடத்து ஆசையுற்றவனாய், அவரை ஸ்நாத்திற்குப் போக நடு இராத்திரியால் கோழியாகக் கூவி எழுப்பி, அவர் கங்கா ஸ்நாநத்திற்குப் போன பின்பு, அவரைப் போல் உருவெடுத்து, அகலிகையுடன் கூடிக்களித்தவன். அதை உணர்ந்த முனிவரால் சாபம் பெற்றவன்.

ஒரு நாள், இந்திரனது சபைக்கு, அவனது குருவாகிய பிரகஸ்பதி (வியாழன்) வர, தகுந்த மரியாதை செய்யத் தவறியதால், அவர் சாபமிட்டு மறைந்தனர். வேறு குருவை அடைய விரும்பி, பிரம்மனை வேண்ட, அவர் துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொள்க எனக் கூறினர். அவ்வாறே இந்திரன் ஏற்று. அவரைக் கொண்டு ஒரு யாகம் செய்தனன். அவரோ - அசுர குருவானதால் யாகத்தில், வெளிப்படையாக தேவர்களுக்கு நன்மை தரும் மந்திரம் கூறியும், மனத்தளவில் அசுரர்கள் விருத்தியடையவும் மந்திரம் கூறி யாகம் செய்தனன். இதை அறிந்த இந்திரன் அக்குருவின் தலையை வச்சிராயுதத்தினால் துண்டித்தனன். அவனது சிரங்கள் மூன்றும் - காகம் - கழுகு - பருந்து என மூன்றுருக் கொண்டு பறந்தோடின. இவனைப் பிரம்மகத்தி பிடித்தது. தேவர்கள் அதைமண் - மரம் - நீர் - பெண்கள் ஆகிய நால்வர்களுக்கும் பகிர்ந்தளித்து, இவனது பாபத்தைப் போக்கினர். மலைகள் சிறகு பெற்ற காலத்தில் அவற்றின் சிறகுகளை வச்சிரத்தால் அறிந்தவன். மக்களைத் துன்பத்தினின்றும் விடுவித்தவன்.

இராவண வதத்தில் - இராமருக்குத் தேர் கொடுத்து உதவியவன். திதி வயிற்றில் இந்திரனைக் கொள்ள இருந்த கருவைச் சிதைத்தவன். அவள் வேண்ட ஏழு கூறாக்கி மருந்துக்களாக இருக்க வரம் தந்தவன். சூரபதுமன் யுத்தத்தில் மயிலாகி கந்தப் பெருமானைத் தாங்கியவன். இவனே, வலப்புற முகமுடைய மயிலாவான். தன் பட்டத்திற்கு மாந்தாதா என்பவன் வராமல் தடை செய்ய எண்ணி அவனுக்கு - லவணாசுரனைக் காட்டிப் போரிட்டு இறக்கச் செய்தவன். தட்ச யாகத்தில் வீரபத்திரர்க்குப் பயந்து குயிலாக மாறி ஓடி ஒளிந்தவன். பிரகலாதனை வெல்ல அவனிடத்து அடிமை வேலை செய்து அவனது தவ வலிமையைத் தானமாகப் பெற்று அவனை வென்றவன். பாற்கடலிற் பிறந்த இந்திரானியை மணந்தவன்.

பூபார நிவரத்தியின் பொருட்டு பூமிதேவி வேண்ட குந்திதேவி மூலம் பாண்டவர் ஐவராக அவதரித்தவன் அதுபோது, இந்திராணியும் துருபதன் மகளாக துரௌபதியாகத் தோன்றினாள்.

இந்திரனைப் பற்றிய புராணச் செய்திகள் பல உள்ளன. இவன் அட்டதிக்குப் பாலகர்களில் ஒருவனாக இருந்து-கிழக்குத் திசைக் காவலனாய் இருப்பவன் இவனை வழிபட்டால் பூமியில் நல்ல மழை பெய்து பூமி செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்ர பூசா சங்கிரகம்

1. ஆசன-மூர்த்தி மூலம்:
(இருந்தருள வேண்டுதல்)

1. ஓம்-ஹாம்-இந்த்ராய-ஆசனாய-நம;
2. ஓம்-ஹாம்-இம்-இந்திர மூர்த்தியே-நம;
3. ஓம்-ஹாம்-இம்-சசி-சகிதாய இந்திரரே-நம;

2. காயத்ரி : (உடல் கொடுத்தல்)

ஓம்-தேவராசாய வித்மஹே: வஜ்ரஹஸ்தாய தீமஹி:
தந்நோ சக்ர: ப்ரசோதயாத்

3. த்யான ஸ்லோகம் : (உருவம் கற்பித்தல்)

ஜராவத கஜாரூடம், ஸ்வர்ண வர்ணம்.
கிரீடினம்: ஸஹஸ்ர நயனம், சக்ரம்,
வஜ்ரபாணீம் விபாவயேத்

4. மூல மந்திரம் : (உயிர் கொடுத்தல்)

ஓம் - ஹாம்-இம்-சசி சகிதாய -
வஜ்ர ஹஸ்தாய - இந்த்ராய நம.

5. துதி : (வாழ்த்து)

வெள்ளை யானையில்மேவுபொன் நிறத்துடன்:
வச்சிரம் வரதம், அபயம் அங்குசம்
கொண்ட விண்ணவர் கோமானாகிய,
இந்திர தேவனை வாழ்த்தி வணங்குவோம்

6. ப்ராத்தனாம் (வேண்டுதல்)

ஸ்வேத கஜாரூட, வஜ்ர கரஹஸ்த, சசி
சகித இந்த்ராய் ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிசேக-பூஜா க்ரியாயாம்; சர்வ
மங்கள சித்திம் - அநுக்ரஹாணாம்

அஷ்ட சத அர்ச்சனா

குறிப்பு:

1. முதலில் ஓம் என்றும்; இறுதியில் நம என்றும் சேர்த்துச் சொல்லுக.

2. ஓம் ஏக தசம் நம - (பதினொன்று) சொல்ல விரும்புபவர்கள். முதல் பதினொன்றைச் சொல்லுக.

3. ஓம் ஏக விம்சதி நம - (இருபத்தொன்று) சொல்ல விரும்புபவர்கள் முதல் இருபத்தொன்றையும் சொல்லுக.

4. ஓம் அஷ்ட சதம் நம - (நூற்றெட்டு) சொல்ல முடிந்தவர்கள் நூற்றெட்டும் சொல்லுக.

5. நேரம்-காலம்-கருதிச் செய்து கொள்ளுக.

6. ஓம் ஏகதசம் நம; ஆனால் - ஓம் ஏக தச ஸ்தோத்ரம் நம; - ஓம் சமர்ப்பயாமி நம என்றும்; ஓம் ஏக விம்சதி நம; ஆனால் - ஓம் ஏக விம்சதி நம; - ஓம் ஸ்தோத்ரம் நம; - ஓம் சமர்ப்பயாமி நம என்றும்; ஓம் அஷ்ட சதம் நம; -ஆனால் - ஓம் அஷ்ட சத நம; ஸ்தோத்ரம் - சமர்ப்பயாமி என்றும் செர்லிக் கொள்க.)

7. மூன்று முறைக்கும் பொருத்தமாகவே-அர்ச்சனை தொடுக்கப்பட்டுள்ளது.

இந்திர பூஜா அஷ்டோத்ர சதநாமாவளி 108

1. ஓம் இந்திராய நம;
2. ஓம் மஹேந்திராய நம;
3. ஓம் ஸஹஸ்ர நேத்ராய நம;
4. ஓம் சுப காய நம;
5. ஓம் திரிலோகதி பகாய நம;
6. ஓம் சசி காந்தாய நம;
7. ஓம் வஜ்ர ஹஸ்தாய நம;
8. ஓம் மேநகா ப்ரியாய நம;
9. ஓம் அகல்யா காமுகாய நம;
10 ஓம் தட்டகோரக ரட்சகாய நம;
11. ஓம் திக்பால நாயகாய நம;
12. ஓம் தேவேந்திராய நம;
13. ஓம் ஜராவத ரூபாய நம;
14. ஓம் ஸ்வர்நாய காய நம;
15. ஓம் புரந்த ராய நம;
16. ஓம் சசி ஸ்மிதாய நம;
17. ஓம் வாஸ்தோஷ் பதாய நம;
18. ஓம் ஜம் பாராய நம;
19. ஓம் காஸ்யபே யாய நம;
20. ஓம் காமதேனு சமன்விதாய நம;
21. ஓம் உபேந்த பூர்வ ஜாய நம;
22. ஓம் தவிபுசான் விதாய நம;
23. ஓம் ஸக்ராய நம;
24. ஓம் வாஸ வாய நம;
25. ஓம் வாமனா க்ரஜாய நம;
26. ஓம் மக வதே நம;
27. ஓம் யஜ்ஞ சூப்ரீதாய நம;
28. ஓம் சூத் ராம்ணே நம;
29. ஓம் சிந்தாமணி சமாயுதாய நம;
30. ஓம் பர்ஜன்யாய நம;
31. ஓம் ந முசயே நம;
32. ஓம் ஹவிர் போக்த்ரே நம;
33. ஓம் ஊர்வசீ ப்ரேம நிரதாய நம;
34. ஓம் கல்பத்ரு மேசாய நம;
35. ஓம் ராசேந்த் ராய நம;
36. ஓம் நாகாதிப சமர்சிதாய நம;
37. ஓம் சித்வ ரத்ன கிரீடவதே நம;
38. ஓம் சாந்தாய நம;
39. ஓம் தயாம் போதயே நம;
40. ஓம் அஹி ப்ரியாய நம;
41. ஓம் விஷ்ணு பக்தாய நம;
41. ஓம் ருது தாம்னே நம;
42. ஓம் சத்ய வாதினே நம;
43. ஓம் ரம்பா லிம்கிதா க்ரகாய நம;
44. ஓம் க்ருஷ்ணா நுவார சூப்ரிதாய நம;
45. ஓம் சதா சந்துஷ்ட மானசாய நம;
46. ஓம் காண்டீ விஜனகாய நம;
47. ஓம் சகலபக்ஷ ப்ரபேதகாய நம;
48. ஓம் புண்யாத் மனே நம;
49. ஓம் வாலி ஜனகாய நம;
50. ஒம் தர்ம சீலாய நம;
51. ஓம் துரா சாகே நம;
52. ஓம் நிர்மலா சயாய நம;
53. ஓம் ஆகண்ட் லாய நம;
54. ஓம் வஜ்ர தேகாய நம;
55. ஓம் மருத் வதே நம;
56. ஓம் ஜய வர்தனாய நம;
57. ஓம் ஹரி ஹயாய நம;
58. ஓம் பீஷணாய நம;
59. ஓம் சண்ட விக்ரகாய நம;
60. ஓம் சத் யாத்மனே நம;
61. ஓம் பலி தர்க்பனாய நம;
62. ஓம் புரு சூதாய நம;
63. ஓம் பரம்த பாய நம;
64. ஓம் முனி வம்த்யாய நம;
65. ஓம் யக்ஷ சேவ் யாய நம;
66. ஓம் வே தாங் காய நம;
67. ஓம் வேத பாவனாய நம;
68. ஓம் ப்ரஹ் யாய நம;
69. ஓம் புண்டரீகாக்ஷாய நம;
70. ஓம் ப்ராசின பர்ஹிசே நம;
71. ஓம் அன காய நம;
72. ஓம் ப்ருத நாசாகே நம;
73. ஓம் புலோம சினே நம;
74. ஓம் சாயய நம;
75. ஓம் யோகாதி பயாய நம;
76. ஓம் சதுர் புசாய நம;
77. ஓம் யஞ்ஞ காயாய நம;
78. ஓம் ப்ருஹத்ப் புஜாய நம;
79. ஓம் அக்ஷமாலா தராய நம;
80. ஓம் ஞான முத்ராவதே நம;
81. ஓம் கர்ம கர்த்தரே நம;
82. ஓம் பவ்யாய நம;
83. ஓம் விஷ்ணு சகாய நம;
84. ஓம் ஜ்ஞாஞ தாய நம;
85. ஓம் குண பாய நம;
86. ஓம் ஸ்வேதகஜ ரூடாய நம;
87. ஓம் குரு குணாய நம;
88. ஓம் வீ ராய நம;
89. ஓம் வேதப் ரியாய நம;
90. ஓம் ஸ்ம்ருதி ப்ரியாய நம;
91. ஓம் சர்வச் ஞாய நம;
92. ஓம் ரக்த வர்ணாய நம;
93. ஓம் நமஸ்கார ப்ரியாய நம;
94. ஓம் சர்வலோக அதிபராய நம;
95. ஓம் சூராய நம;
96. ஓம் கா மாய நம;
97. ஓம் தபஸ் விநேயாய நம;
98. ஓம் வ்ருத் தாய நம;
99. ஓம் சத்ய வாசாய நம;
100. ஓம் சிவ பக்தாய நம;
101. ஓம் அமராவதி பதியாய நம;
102. ஓம் காசிப புத்ராய நம;
103. ஓம் அதிதி ப்ரியாய நம;
104. ஓம் உச்சைக்ர ரூபாய நம;
105. ஓம் தேவ தேவாய நம;
106. ஓம் சகலேஷ்டார்த்த தாய நம;
107. ஓம் ராச ராச வரப்ரதாய நம;
108. ஓம் இந்த்ர தேவதேவ நம;

இந்திர நாமம் ஜெபித்து; தாம்பூல -பழ-நைவேத்யம்- சமர்ப்பித்து;

தூப-தீப-கற்பூர-நீராஞ்சனம்-செய்க.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 
temple news
மழையாய்ப் பெய்து மகிழ்விப்பது பெருவெள்ளமாய்த் தோன்றித் துன்புறுத்தவது நெடுநாளாய் வாராதிருந்து ஏங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar