Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இந்திர புராணம்! இந்திர புராணம்! எம புராணம் எம புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
அக்னி-புராணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
17:35

அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் மூவருக்கும் உருவ மாறுபாடு உண்டு. கரம்-சிரம்-நிறம்-ஆயுதம் முதலியணுகளில் வேறுபடுவர். இங்க திசாக்னி தேவர் எனப்படும் அ(ஷ்)ட்டதிக்குப் பாலகர்களில் ஒருவராகிய அக்நி தேவர் பற்றியே காண்கின்றோம். இவனது தலைநகர் - தேசோவதி இவன், விசுவாதரர்-சுசிஷ்மதி என்ற தம்பதியருக்கு காசித் தலத்தில் தோன்றினான். இவனுக்கு ஆரம்பத்தில் இட்ட பெயர் பவித்ர கிருகபதி என்பதாகும். அக்நி என்பதும் ஒரு பதமே. சிவன் இவனது தவத்தை உகந்து அளித்த பதமே அக்னி: அதன் பொருட்டு இவன் அக்னிதேவன் ஆனான். இவன் காசியம்பதியில் வளர்த்த போது; நாரதர் ஒரு முறை இவன் இல்லத்திற்கு வந்தார். அவர் இவனது பெற்றோராண விசுவாதரர் - சுசிஷ்மதியைப் பார்த்து; இவன் அழகிலும் அறிவிலும் சிறந்து காணப்படுகிறான்; என்றாலும், பன்னிரண்டாவது வயதில் அக்னியின் அம்சமான மின்னல் தாக்கி இறப்பான் என்று கூறினார்.

அதுகேட்டு, தம்பதியர் கலங்கினர். என்றாலும் விதியை நினைத்து வளர்த்து வந்தனர். உரிய வயதும் வந்தது. தாய் தந்தையர் கலங்கி நின்றனர். மகன் யாது விவரம் எனக் கேட்டான்? தந்தை-தாய் ஆயினார் ஆற்றாத அமுத கண்ணீராய். உண்மையை உரைத்தனர்.  கிருகபதியாகிய அச்சிறுவன் இறைவன் இருக்க மின்னல், இடி என்ன செய்யும் என்று கூறிய படி தவம் செய்யச் சென்றான். காசியம்பதியில் சிவன் திருக்கோயில் ஒன்றின் முன் அமர்ந்து கடுந்தவம் இயற்றினார். வாரம் மாதம் எனச் சில கடந்தன. இவன் முன்பு இறைவன் இந்திரன் உருவில் எழுந்தருளினார். உனக்கு வேண்டிய வரங்கேள் என்றான். கிருகபதியோ சிவனைத் தவிர வேறு யாரிடமும் வரம் பெறேன் என்றான். கோபம் உற்றோனைப் போல ஆயிரம் மின்னல் ஒத்த இடியோசையுடன் கூடிய வஜ்ர ஆயுதத்தை ஏவினான். கிருகபதியோ விதியை நினைந்தவாறு மூர்ச்சை உற்றான். சிவன் எழுப்ப - எழுந்த கிருகபதியை நோக்கி உன்னைச் சோதிக்கவே இந்திரன் உருவில் - வச்சிரம் ஏந்தி வந்தேன்; உன் தவத்தை மெச்சினேன், என்று கூறினார்.

உன்னைக் கொல்ல வந்த இந்திரனுக்கும் உன் உயிரைக் கொண்டு போக வந்த இயமனுக்கும் இடைப்பட்ட இடமாகிய விதிக் எனப்படும் தென்கிழக்குத் திசை ஆகிய (தக்ஷிண பூர்வதிசா) - கோண திசைக்கு உன்னை அக்னி என்ற பதம் அளித்து திசைக் காவலனாக நியமிக்கிறேன்; என மொழிந்தார் - வரமளித்தார். அது முதல் இவன் திக்பாலகர் ஆனான். மேலும், நீ எல்லாத் தேவர்களுக்கும் வாயாக இருந்து அவிர்பாகத்தைக் கொண்டு சேர்ப்பாக என்றும் கூறியருளினார். இவன் தவமிருந்து பூசித்த லிங்கம்; காசியம் பதியில் அக்னீசுவரர் என்றும்; கோயில் அக்னீச்சுரம் என்று விளங்கி வரக் காணலாம். இவனது மனைவியின் பெயர் சுவாகா! தேவி என்பது. மனைவி தானே கணவனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டும்; அது கருதியே அவளின்; பெயரால் ஸ்வாகா என விளித்து, வேள்வியின் போது அவிர்பாகம் அளிக்கின்றோம். அக்னிக் - சுவாகாதேவி மூலம் - தக்ஷ்ணாக்னி - கார்கபத்யம் - ஆகவனீயம் என்ற மூன்று குமாரர்கள் தோன்றினர். இவர்கள், மூன்று திசைகளில் சதுச்ரம் - விருத்தம் - பங்கம் என்ற குண்டங்களாய் அமைந்து; இறைவர் - தேவர் - பிதிர் முதலியோர்களுக்கான அவிர்பாகங்களை ஏற்பர்.

இவனது வாகனம் ஆடு: இவன், சிவனது நெற்றிநேத்திர மாய் இருப்பான். அவ்வாறிருந்து, ஸ்கந்தனை உற்பவித்தும்; மன்மதனை சம்காரமும் செய்தருளியவன். இவன் தக்ஷயாகத்தில் அவிர்பாகம் ஏற்றதால்; ஏழு நாவும் - மூன்று கரமும் அறுப்புண்டவன்; அதை, வீரபத்திரர் செய்தார். ஒரு முறை, சத்த இருடிகளின் மனைவியர் மேல் ஆசை கொண்டு வருந்தினன்; அது கண்டு, மனைவி சுவாகாதேவி அருந்ததி ஒழிந்த அறுவர் போலத் தனித்தனி உருக்கொண்டு இவன் ஆசையைத் தணிந்தனள். சிபிச்சக்கர வர்த்தியின் சத்தியத்தைச் சோதிக்க விரும்பி புறா உருக்கொண்டனன்.  இராம இராவண யுத்தத்தில் நீலன் என்ற வானர உருவில் இருந்தான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யுத்தத்தில் முருகக் கடவுளின் தேரில் கோழிக்கொடியாய் இருந்தவன். சீதை, அநுமனைத் தகிக்காதிருக்க வேண்ட அவ்வகை அருள்புரிந்தவன்.

இவன், சூரிய சந்திரர்களித்து சோதியாகவும், மேகத்து மின்னலாகவும், பூமியில் தீயாகவும், கடலில்  வடவையாகவும், ஆன்மாக்களிடத்தில் ஜடராக்கினியாகவும் இருப்பான். இவனது புராணமும் விரிந்தது சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. அக்னி, சக்தி எனும் ஆயுதம் தரித்து சிவப்பு நிறத்தினனாய் இருப்பான் ஏழு நாக்குகளை உமையவன். இவனைத் தொழுதால் இடி மின்னலின் தாக்குதலினின்றும் தப்பிக்கலாம். நெருப்பின் துன்பத்தினின்றும் விடுபடலாம். வெப்புநோய் நீங்கி இன்புறலாம்.

அக்னி பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம் -ஹாம்-அக்நி-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-அம்-அக்நி மூர்த்தியே நம;
3. ஓம்-ஹாம்-அம்-ஸ்வாஹா ஸஹிதாய அக்நயே நம;

2. காயத்ரி:

ஓம் ருதுர நேத்ராய வித்மஹே; சக்தி ஹஸ்தாய தீமஹி;
தந்நோ அக்நி ப்ரசோதயாத்

3. த்யான சுலோகம்:

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்;
அக்ஷமாலா கமண்டலும்;
ஜ்வால மாலாகுலம்; ரக்தம்;
சக்தி ஹஸ்தம்; அஜாஸனம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹம்-அம்-ஸ்வாஹா ஸஹிதாய
சக்தி ஹஸ்தாய-அக்நியே நம;

5. துதி:

ஆட்டுக் கடாவில் அமர்ந்த செம்மேனி
விரதம் சக்தி வயங்கு கமண்டலம்
அட்ச மாலை அமை உடை
அக்னி தேவரைப் போற்றி செய்குவோம்

6. பிரார்த்தனை:

க்ருஷ்ண அஜாரூட சக்தி கர ஹஸ்த
ஸ்வாஹா சகிதாய அக்நி ஆன்மார்த்த, பரார்த்த
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம், சர்வ
மங்கள சித்திம் அநுக்ர ஹாணாம்.

அக்னி அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் அக்நியே நம;
2. ஓம் ஜ்வல நாய நம;
3. ஓம் வீதி கோத் ராய நம;
4. ஓம் க்ரு சாநவே நம;
5. ஓம் தநஞ்சாய நம;
6. ஓம் விபா வசவே நம;
7. ஓம் சாத வேதாய நம;
8. ஓம் திரி தாம்நே நம;
9. ஓம் மந்த்ர தீதிதாய நம;
10.ஓம் ஸ்வதாப தாய நம;
11. ஓம் வஹ் நாய நம;
12. ஓம் சி காய நம;
13. ஓம் ஸ்ரீப்ரதாய நம;
14. ஓம் சமீகர் பாய நம;
15. ஓம் ப்ருஹத் பாநாவ நம;
16. ஓம் ஹிமா ராய நம;
17. ஓம் ஹவ்ய வாகநாய நம;
18. ஓம் வைச்வாந ராய நம;
19. ஓம் சித்ர பாநாவ நம;
20. ஓம் ராஜ ந்யாய நம;
21. ஓம் தேவதா முகாய நம;
22. ஓம் சப்த ஹஸ்தாய நம;
23. ஓம் மந்த்ர ஜிஹ்வாய நம;
24. ஓம் குமார பரிபோசகாய நம;
25. ஓம் மருத்வேஷ்டிப்ராச்ய நம;
26. ஓம் விப்ராசநா சீர்த்தாய நம;
27. ஓம் சங்க தாய நம;
28. ஓம் பாண்டவப்ராசயாய நம;
29. ஓம் சோசிஷ்கேசாய நம;
30. ஓம் க்ருஷ்ண வர்த்மநே நம;
31. ஓம் ரோகி தாஸ்வராய நம;
32. ஓம் தமோ பஹாய நம;
33. ஓம் ஜ்வாலாயு தாய நம;
34. ஓம் வை ஜயந்தாய நம;
35. ஓம் உதர்ச் சிசே நம;
36. ஓம் அஜிநா ப்ரபவே நம;
37. ஓம் வாயு சகாய நம;
38. ஓம் சதுஸ் ருங்காய நம;
39. ஓம் த்வி சிர்ச்சகாய நம;
40. ஓம் பர்ஹிஸ் சூச்மனே நம;
41. ஓம் தந காய நம;
42. ஓம் க்ருபீட யோநயே நம;
43. ஓம் சப்தார்ச் சிசே நம;
44. ஓம் சூத புசே நம;
45. ஓம் தநூந பாதே நம;
46. ஓம் த்வி தக்ஷிண ஹஸ்தாய நம;
47. ஓம்  சேத்ர நேத்ர தாய நம;
48. ஓம் மந்த ஹாசாய நம;
49. ஓம் க்ருஷ்ண கௌமோதகீ நம;
50. ஓம் ப்ரதாய நம;
51. ஓம் சூகூ ராணாய நம;
52. ஓம் பங்க்தி ராதசே நம;
53. ஓம் சகோ சசே நம;
54. ஓம் வசவே நம;
55. ஓம் திரி பாதாய நம;
56. ஓம் உசர் புதாய நம;
57. ஓம் சீதாபதி விரத்ய ப்ரகாசகாய நம;
58. ஓம் ஹிரண்ய ரேதசே நம;
59. ஓம் தமுதாய நம;
60. ஓம் அர்ச்சிஷ்மநே பாவகாய நம;
61. ஓம் அந லாய நம;
62. ஓம் பாஞ்ச சன்யாய நம;
63. ஓம் சிவாயு தாய நம;
64. ஓம் அநேக ரூபாய நம;
65. ஓம் த்ரித நாவெ நம;
66. ஓம் ருக் காய நம;
67. ஓம் தேஜோவதீ ப்ரபவெ நம;
68. ஓம் தூம த்வசாய நம;
69. ஓம் சாக்ர விதே நம;
70. ஓம் சர்வ ரீசாய நம;
71. ஓம் துசக்ர ஹாய நம;
72. ஓம் புண்டரீ காய நம;
73. ஓம் சர்வபால நேத்ராத்மநே நம;
74. ஓம் மத்ஸ்ய சாபதாய நம;
75. ஓம் க்ருத்திகாதார தேவதாய நம;
76. ஓம் சூக் ராய நம;
77. ஓம் பரிக் ஞாய நம;
78. ஓம் தரே தாத்மநே நம;
79. ஓம் ருணபாத நிவாரகாய நம;
80. ஓம் வம்ஸ் யாய நம;
81. ஓம் தக்ஷிண பூர்வேசாய நம;
82. ஓம் நீலதா தய நம;
83. ஓம் நனேஷ்ட தாய நம;
84. ஓம் பசேலி மாய நம;
85. ஓம் ஆஸ்ரயா சாய நம;
86. ஓம் நர்ய பாய நம;
87. ஓம் பாட பாய நம;
88. ஓம் பிந்தி ராய நம;
89. ஓம் அர்க் காய நம;
90. ஓம் ஸ்ருஜி ஹாய நம;
91. ஓம் வாயு ஸ்வாரயே நம;
92. ஓம் உஷ் ணாய நம;
93. ஓம் விசர்ப் பாய நம;
94. ஓம் விஸ் வாத்மநே நம;
95. ஓம் அரணி சம்பவாய நம;
96. ஓம் கர்ம ப்ரம்ம ரூபாய நம;
97. ஓம் ப்ரம்ம வர்ச்சபதாய நம;
98. ஓம் அநேக அர்ச்சிதாய நம;
99. ஓம் சகல பக்ஷ்ணாய நம;
100. ஓம் வரதாய நம;
101. ஓம் சக்தி ஹஸ்தாய நம;
102. ஓம் ருத்ர நேத்ராய நம;
103. ஓம் விசுவாத புத்ராய நம;
104. ஓம் க்ருகபதி நாமாய நம;
105. ஓம் சப்த சிஹ்வாய நம;
106. ஓம் மேஷ வாக நாய நம;
107. ஓம் ஸ்வாகா பதாய நம;
108. ஓம் அக்நி தேவ தேவ நம;

அக்நி நாமம் சபித்து; தாம்பூல-பழ-நைவேத்யம் சமர்ப்பித்து, தூப, தீப, கற்பூர, நீராஞ்சனம் செய்க மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 
temple
மழையாய்ப் பெய்து மகிழ்விப்பது பெருவெள்ளமாய்த் தோன்றித் துன்புறுத்தவது நெடுநாளாய் வாராதிருந்து ஏங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.