புதுச்சேரி: காராமணிக்குப்பம் சுந்தரவிநாயக சிவசுப்ர மணிய சுவாமி தேவஸ்தானத்தில், பாலஸ்தாபன திருப்பணி துவக்க விழா நேற்று நடந்தது.
காராமணிக்குப்பம் சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், புதியதாக திருப்பணி செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர். இதையொட்டி சத்ரு சம்ஹார ஹோமம் கடந்த 1ம் தேதி அபிஷேக ஆராதனையுடன் நடந்தது. 10ம் தேதி, மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மூர்த்தி கலாகர்ஷணம் நடந்தது. 11ம் தேதி இரவு 9 மணிக்கு முதற்கால பூர்ணாஹூதி, திரவியா ஹூதி, கலசாபிஷேகம் நடந்தது.நேற்று 12ம் தேதி பாலஸ்தாபன திருப்பணி பூமி பூஜை நடந்தது. ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.