திருவிளையாட்டம் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2015 11:06
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் கோயில் திருப்பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிளையாட்டத்தில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமா ள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நே ற்றுமதியம் பொக்லைன் எந்திரம் மூலம் கோயிலில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகறித்த தகவலின் பேலில் தரங்கம்பாடி தாசில்தார் க ணபதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கோயிலுக்குசெசன்று சிலைகளை மீட்கமுயன்றனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பூர் போலீசசார் பாதுகாப்படன் சிலைகள் மீட்கப்பட்டு தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.அங்கு தரங்கம்பாடி டே னீஷ் கோட்டை காப்பாட்சியர் வீரமணி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செசய்தார்.அவை ஐம்பொன் னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமி சிலைகள் என்பது தெரியவந்தது. இதில் ஸ்ரீதே வி, பூதேவி சிலைகள் 67 செச.மீ. உயரம் உள்ளதாகவும், அதன் பீடங்கள் 20 செச.மீ.நீள, அகலத்திலும், 10 செச.மீ. உயரத்திலும் உள்ளன.பெருமாள் சிலைசிலையின் உயரம் 85 செச.மீ.பீடம் 27 செச.மீ. நீள,அகலத் திலும் 12 செச.மீ. உயரத்திலும் உள்ளன. இவை 11ம் நூற்றாண்டை சேசர்ந்த சிலைகளாக இருக்கக்கூடும் என கூறப்பட்டபோதிலும், சிலைகள் குறித்த விபரங்களை செசன்னை தொல்லியல் துறைக்கு அனுப்பி உரிய ஆய்வுக்கு பின்னரே முழு விபரங்கள் தெரிய வரும் என காப்பாட்சியர் வீரமணி தெரிவித்தார்.