பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
11:06
வாலாஜாபாத்: நாயகன்பேட்டை கிராமத்தில், ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு, ஆனி திருமஞ்சனம் மற்றும் தோட்ட உற்சவ விழா கோலாகலமாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் மற்றும் தோட்ட உற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணி அளவில் வேணு கோபால சுவாமி, உபநாச்சியாருடன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து, சுவாமிக்கு 10:30 மணி அளவில் சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனமும்; பிற்பகல் 12:00 மணி அளவில் தோட்டத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தோட்ட உற்சவ விழாவில், நாயக்கன்பேட்டை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமவாசிகள் கலந்து கொண்டு, வேணுகோபால சுவாமியை வழிபட்டு சென்றனர்.