சில தெய்வங்களும் தேவர்களும் இசைக் கருவியுடன் அருள்பாலிக்கிறார்கள். சரஸ்வதி, நாரதர் ஆகியோர் வாத்தியங்களுடன் இருப்பர். தெய்வங்கள் வைத்துள்ள இசைக்கருவிகளின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி வைத்துள்ள வீணையின் பெயர் விபஞ்சி அல்லது கச்சபி. நாரதரின் கையிலுள்ள வீணையின் பெயர் மகதி. தும்புரு எனப்படும் பசுமுகம் கொண்ட தேவரின் கையிலுள்ள வீணையின் பெயர் கலாவதி. நந்திதேவர் சிவநடனத்தின் போது மிருதங்கம் இசைப்பார். காரைக்கால் அம்மையார் தாளம் (ஜால்ரா) இசைப்பார். சிவபெருமான் உடுக்கு தோல் கருவியை ஒலிப்பார். கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கிறார்.