வால்பாறை: வால்பாறை ஷீரடிசாய்பாபா கோவிலில் நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், நகரின் மத்தியப்பகுதியில் ஷீரடி சாய்பாபா கோவில் அமைக்கப்பட்டு, நாள் தோறும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நேற்று (வியாழக்கிழமை) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜனை, அலங்கார பூஜையும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.