பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
11:06
திருப்பூர்: திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டனில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான, 1.30 ஏக்கர் இடத்தில், மாரியம்மன் கோவில் கட்டி, ஒரு மாதமாக வழிபட்டு வந்தனர். ‘கோவிலை உடனடியாக அகற்றுங்கள்’ என, மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் அகற்றாததால், போலீஸ் பாதுகாப்புடன், மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் தலைமையில் ஊழியர்கள் ÷ நற்று காலை, கோவிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சிலையை அகற்றும்போது, பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். சில பெண்கள் சாபமிட்டனர். ஒரு பெண், சிலையை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினார். அப்பெண்ணை மகளிர் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின், ‘வேறு இடத்தில் வைத்து, வழிபட்டுக் கொள்கிறோம்’ என, சிலையை வாங்கிச் சென்றனர்.