மதுரை : மதுரை அனுப்பானடி நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் கும்ப பூஜை, மகாஅபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், மங்கலநாண் சூட்டுதலும் நடந்தது. சிவாச்சாரியார்கள் காளீஸ்வரன், ராஜா முன்னின்று நடத்தினர். நடன தத்துவம் குறித்து ராமச்சந்திரன் பேசினார். மதியம் அன்னதானம் நடந்தது.