காரைக்கால்:காரைக்கால் ஒப்பில்லாமணியர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. காரைக்கால் வடமறைக்காடு பகுதியில் உள்ள அருள்மிகு சவுந்தரம்பாள் சமேத ஒப்பிலாமணியர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில்பத்து சுயம்வரத பஸ்வினி சமேத பார்வதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடந்தது.