ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2015 12:06
திருமழிசை: வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் உள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவிலில். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனி பிரம்மோற்சவம் நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டு இன்று தொடங்கி, வரும் 5ம் தேதி வரை, ஆனி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 5:30 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றமும், மாலை தங்க தோளுக்கினியானில் ஜெகந்நாத பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். முன்னதாக, நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.
ஜூன் 27 மாலை தங்க தோளுக்கினியான் ஜூன் 28 காலை கருட சேவை மாலை அனுமந்த வாகனம் ஜூன் 29 காலை சேஷ வாகனம் மாலை சந்திர பிரபை ஜூன் 30 காலை மோகினி அவதாரம் மாலை சிம்ம வாகனம் ஜூலை 1 காலை சூர்ணாபிஷேகம் மாலை தங்க தோளுக்கினியான் ஜூலை 2 காலை திருத்தேர் மாலை மாடவீதி உற்சவம் ஜூலை 3 காலை தங்க தோளுக்கினியான் மாலை குதிரை வாகனம், வேடுபறி ஜூலை 4 காலை ஏழூர் புறப்பாடு, தீர்த்தவாரி மாலை கொடியிறக்கம் ஜூலை 5 மாலை புஷ்பயாகம், ஸப்தாவரணம்.