கீழக்கரை: காஞ்சிரங்குடி ஊராட்சி கோகுலம் நகரில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த ஜூன் 25 ல் காப்புகட்டுதல், விக்னேஷ்வர பூஜை, முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9.45 மணிக்கு உத்திரகோசமங்கை மீனாட்சிசுந்தர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அபிஷேக, ஆராதனைகளுக்கு பிறகு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.