பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
12:06
கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவிலுக்கு சொந்தமான, 10 உண்டியல்கள் நேற்று காலை திறந்து எண்ணப்பட்டது.இதில், 52 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி, தென் ஆப்பிரிக்க ரூபாய் 100 ரேண்ட் - ஒன்று, கென்யாவை சேர்ந்த பணம் 100 சில்லிங் - ஒன்று, மலேசியா 10 ஆர்.எம்., - ஒன்று உட்பட, 7.15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.மருதமலை துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர் பாலசுப்பிரமணி, கோபி நுகர்வோர் அமைப்பினர், கம்பன் கல்லூரி மாணவியர், பி.கே.ஆர்., கல்லூரி உட்பட பலர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.குண்டம் தேர் திருவிழாவுக்குப்பின், கடந்த, மார்ச், 5ம் தேதி திறந்தபோது, 15.75 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.