காரைக்கால்: காரைக்காலில் ராயப்பர், சின்னப்பர் தேவாலய ஆண்டு திருவிழாவில் இன்று அலங்கார தேர்பவனி நடக்கிறது. நெடுங்காடு மேலகாசாகுடி புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலய ஆண்டு திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாதா தேர்பவனி, சின்னப்பர் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று புனித ராயப்பர் சின்னப்பர் அலங்கார தேர்பவனி நடக்கிறது. வரும் 30 தேதி திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. தொடர்ந்து, மாதா கஞ்சி வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்கு குரு, விழா குழுவினர் மற்றும் மேலகாசாகுடி கிராம மக்கள் செய்துள்ளனர்.