புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளை யம் ஓம்சக்தி புத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு 1.25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மண்ணாடிப்பட்டு தொகுதி லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலுக்கு இந்து அறநிலைய துறை மூலம், திருப்பணிக்காக 1.25 லட்சம் ரூபாயை, துணை சபாநாயகர் செல்வம் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதனை, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சூரன் பெற்றுக் கொண்டார். அரியபுத்திரி, ஞானசேகர், என்.ஆர்.காங்., பிரமுகர் சக்திவேல் உடனிருந்தனர்.